’வணக்கம் சென்னை’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. முழுக்கமுழுக்க நகைச்சுவையாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அவர் விஜய் ஆண்டனியை வைத்து, ‘காளி’ என்ற படத்தை இயக்கினார்.
இந்நிலையில் இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் மூன்றாவது திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி கிருத்திகா உதயநிதி இயக்கும் மூன்றாவது திரைப்படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளனர்.