2010 ஆம் ஆண்டு விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றத் திரைப்படம் 'களவாணி'. இப்படத்தை இயக்குநர் சற்குணம் இயக்கினார். தமிழ் திரையுலகில் பேய் படங்களின் வரத்து அதிகமாக இருந்த காலக்கட்டத்தில், முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் வெளியாகி, ஒரு புதிய டிரெண்டையே உருவாக்கியது. இப்படத்திற்கு பிறகுதான் நகைச்சுயை மையப்படுத்தி மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் வரத்தொடங்கின.
புதிய கதைக்களத்தில் 'களவாணி-2' - vimal
விமல், ஓவியா நடிப்பில் உருவாகி வரும் 'களவாணி 2' படத்தை கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டுவர படக்குழு துரிதமாக செயல்பட்டு வருகிறது.
![புதிய கதைக்களத்தில் 'களவாணி-2'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2801431-536-045ca6f6-1a57-4b9f-928d-d505046262eb.jpg)
புதிய கதைக்களத்தில் 'களவாணி-2'
இப்போது, முதல் பாகத்தை எடுத்த அதே குழு இணைந்து `களவாணி 2' படத்தை உருவாக்கியிருக்கிறது. கோடை விடுமுறையில் படத்தை திரைக்கு கொண்டு வர பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. விமல் கதாநாயகனாகவும், ஓவியா கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, மயில்சாமி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படம் முதல் பாகத்தைப் போல் இல்லாமல் புதிய கதைக்களத்தையும், அழுத்தமான கதையையும் கொண்டது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.