தமிழ் சினிமாவில் 2010ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் விமல் - ஓவியா நடிப்பில் வெளிவந்த படம் களவாணி. இப்படம் அப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான களவாணி 2 தற்போது உருவாகிவருகிறது.
அப்பாடா...! ஒருவழியா 'களவாணி 2' வெளியாகுது! - விமல்
விமல் - ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள களவாணி 2 படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![அப்பாடா...! ஒருவழியா 'களவாணி 2' வெளியாகுது!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3474573-125-3474573-1559712895591.jpg)
File pic
இப்படத்தை களவாணி படத்தின் இயக்குநர் சற்குணமே இயக்கிவருகிறார். இப்படத்திலும் விமல் கதநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். மேலும் ஆர்.ஜே. விக்னேஷ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, வினோதினி, வித்தியநாதன் உள்ளிட்டோர் நடித்து உள்ளார்கள். ‘வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்’ இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படம் பல்லேவறு பிரச்னைகளை எதிர்கொண்ட நிலையில், தற்போது ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.