தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தடைகளைத் தாண்டி வருகிறான் களவாணி-2

தடைகளை தாண்டி களவாணி-2 வருவதாக இயக்குனர் சற்குணம் கூறியுள்ளார். இடைக்காலத்தடை பிரச்சனைகள் முடிந்து படம் இன்று (ஜூலை 5ஆம் தேதி) வெளியானது.

தடைகளை தாண்டி வருகிறான் களவாணி-2

By

Published : Jul 5, 2019, 11:41 AM IST

தடைகளைத் தாண்டி களவாணி-2 படம் வருவதாக இயக்குனர் சற்குணம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சற்குணம் தன்னிடம் வாங்கிய 67 லட்சத்து 38 ஆயிரம் பணத்தை படம் வெளிவரும் முன்பே தனக்கு தருவதாக கூறியதாக இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் புகார் எழுப்பினார்.

சொன்னபடி பணத்தை திருப்பித் தராததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஜெயக்குமார் இப்படத்திற்கு இடைக்காலத்தடை வாங்கினார். இதனையடுத்து இப்படத்திற்கு இருந்த பிரச்சனைகள் முடிந்து படம் இன்று (ஜூலை 5ஆம் தேதி) வெளியானது.

ABOUT THE AUTHOR

...view details