நட்புடன் 'களத்தில் சந்திப்போம்' டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு - ஜீவாவின் களத்தில் சந்திப்போம்
சென்னை: ஜீவா - அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'களத்தில் சந்திப்போம்' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
![நட்புடன் 'களத்தில் சந்திப்போம்' டீசர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு களத்தில் சந்திப்போம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:52:07:1603549327-kalathil-santhipom-1-2410newsroom-1603549308-364.jpg)
'மாப்ள சிங்கம்' படத்தை இயக்கிய ராஜசேகர் தற்போது ஜீவா - அருள்நிதியை வைத்து 'களத்தில் சந்திப்போம்' என்னும் புதிய படத்தை இயக்கியுள்ளார். நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஜீவா, அருள்நிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ராதாரவி, ரோபோ சங்கர், பால சரவணன், 'ஆடுகளம்' நரேன், ரேணுகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தை ஜீவாவின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் இந்த நிறுவனத்தின் 90ஆவது படமாகும்.
இந்தப் படத்தின் டீசர் அக்டோபர் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.