தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கலைப்புலி தாணு அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவராகத் தேர்வு! - Elected President of the All India Film Federation

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

கலைப்புலி தாணு
கலைப்புலி தாணு

By

Published : Dec 30, 2020, 2:26 PM IST

தமிழ் சினிமாவின் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனங்களான கலைப்புலி இண்டர்நேஷனல், V கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் நிறுவனர் கலைப்புலி தாணு.

தமிழ்த் திரைப்படத் துறையில் 1971இல் விநியோகஸ்தராகத் தனது பயணத்தைத் தொடங்கிய கலைப்புலி தாணு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகத் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக கலைப்புலி தாணு ஏகமனதாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

1971இல் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய கலைப்புலி தாணு அவர்களின் ஐம்பதாவது ஆண்டு திரைப் பயணத்தில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக ஏகமனதாகத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது அவரது திரைத்துறை சேவைக்கான உயரிய அங்கீகாரம் என்றால் மிகையில்லை என்கின்றனர் திரைத் துறையினர்.

தமிழ்த் திரையுலகம் சார்பாக பழம்பெரும் தயாரிப்பாளர்களான எஸ்.எஸ். வாசன், நாகிரெட்டி, ஆகியோர் இப்பதவியை அலங்கரித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் அகில இந்திய திரைப்படக் கூட்டமைப்பின் 71ஆவது தலைவராக ஜனவரி 1ஆம் தேதி கலைப்புலி தாணு பதவியேற்க உள்ளார்.

இவருடன் தென்னிந்திய சினிமாவில் இருந்து துணை தலைவர்களாக கல்யாண், சி.பி.விஜயகுமார், என்.எம். சுரேஷ், ஆனந்தா எல். சுரேஷ், டி.பி. அகர்வால் ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details