'கோமாளி' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் காஜல். இப்படம் வரும் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து தெலுங்கில் 'ரணரங்கன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்தடுத்த படங்கள் இவரது நடிப்பில் வெளியாகயிருக்கிறது.
களரி கற்றுக் கொள்ளும் காஜல்! - இந்தியன் 2
'இந்தியன் 2' படத்திற்காக களரி கற்றுக் கொள்கிறார் நடிகை காஜல் அகர்வால். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 'இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் காஜல், படத்திற்காக களரி கற்றுக் கொண்டு வருகிறார். இவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. படத்தின் படப்பிடிப்பு 12ஆம் தேதி தொடங்கயிருக்கும் நிலையில், கமல் ஹாசன் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று படக்குழு அறிவித்துள்ளது.
படத்தில் சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், வித்யூத் ஜாம்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையக்கவுள்ளார். படம் அடுத்த வருடம் தமிழ் வருடப் பிறப்பிற்கு வெளியாவதற்கு திட்டமிட்டிருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.