கமல்ஹாசனுடன் 'இந்தியன்-2' படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால், தெலுங்கில்இரட்டை இயக்குனர்கள் விஷ்ணு மஞ்சு - ஜாஃப்ரி கீசின் இயக்கத்தில் உருவாகிவரும் 'மோசகாள்ளு' என்ற படத்திலும் நடிக்கிறார்.
இப்படத்தை 24 ஃப்ரேம்ஸ் ஃபேக்டரி தயாரிக்கிறது. 'மோசகாள்ளு' படத்தில் காஜல் அகர்வால் 'அனு' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படம் உலகின் மிகப்பெரிய தொழில் நுட்ப ஊழல் குறித்த கதைகளத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் காஜல் பதிவிட்டுள்ளார். அதில் அனைவருக்கும் வணக்கம். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னையின் நல்லது கெட்டதை நாம் பார்க்கும் பார்வையில் உள்ளது. நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த கோடையில் உங்களுக்கு தெரியும் என்னுடைய பார்வை எவ்வளவு சிறந்தது என்று அன்புடன் அனு. என்று பதிவிட்டுள்ளார்.
தெலுங்கில் மோசகாள்ளு என்றால் மோசக்காரன் என்று பொருள்.
இதையும் வாசிங்க: அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை: 'இந்தியன் 2' விபத்து குறித்து உருக்கமான ட்வீட் வெளியிட்ட காஜல் அகர்வால்!