தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 விலும் நடித்து வருகிறார்.
நான் அப்படியே மயங்கிட்டேன்...தாஜ்மஹால் அழகை வர்ணித்த காஜல் அகர்வால் - காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் தாஜ்மஹால் முன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படி பிஸியாக படங்களில் நடித்து வந்தாலும் தனது நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நேரத்தை மறக்கமால் செலவழித்து வருகிறார். அவர்களுடன் அவ்வப்போது வெளியே போகும்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பகத்தில் வெளியிடுவதையும் ஒரு வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது தாஜ்மஹாலுக்கு சென்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துடன் , தாஜ்மஹாலின் அழகு குறித்து பலர் என்னிடம் சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் நான் முதன் முறையாக நேரில் தாஜ்மஹாலை பார்க்கிறேன். இதன் அழகில் மயங்கினேன். இந்த நாளை என்னால் மறக்க முடியாது’என்று பதிவிட்டுள்ளார்.