தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சத்குரு பதிவிட்ட கோயில் காணொலி: இதயம் நொறுங்கிய காஜல் அகர்வால்! - நடிகை காஜல் அகர்வால்

அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்கக்கோரி ட்வீட் செய்துவரும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை காஜல் அகர்வால் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

kajal
kajal

By

Published : Apr 4, 2021, 12:40 PM IST

தமிழ்நாட்டு கோயில்கள் பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என, ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீபகாலமாக ட்விட்டரில் வலியுறுத்திவருகிறார்.

தமிழ்நாடு இந்து அறநிலைத் துறை பயனற்றது என்றும் விமர்சித்துவருகிறார். இந்த முன்னெடுப்பை வரவேற்கும்விதமாக #FreeTNTemples, #கோயில்அடிமைநிறுத்து ஆகிய ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு துறை பிரபலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், பிரபல பெண் தொழில் அதிபரும் பையோகான் நிறுவனத்தின் தலைவருமான கிரண் மசூம்தார், முன்னாள் சிபிஐ இயக்குநர் நாகேஸ்வர ராவ் ஐபிஎஸ், நடிகைகள் கங்கனா ரனாவத், கஸ்தூரி, ஸ்ரீதிவ்யா, ஸ்ரீநிதி ஷெட்டி (கே.ஜி.எஃப். பட நடிகை), ரவீனா டண்டன், மெளனி ராய், திரெளபதி பட இயக்குநர் மோகன், பாஜகவின் தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி. ரவி உள்ளிட்ட பலர் ட்விட்டரில் ஆதரவு அளித்துள்ளனர்.

சமீபத்தில் சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில், "முறையாகப் பராமரிப்பின்றி இருக்கும் கோயில் ஒன்றின் காணொலியைப் பதிவிட்டு, புனித தலங்களில் ஒளி என்பது அவசியமான குணங்கள் ஒன்று. இந்தக் கோயில் இருண்டுபோய் இறந்த நிலையில் காணப்படுகிறது.

இதைப் பார்க்கும்போது மனம் வேதனை அடைகிறது. சொல்ல முடியாத துயரத்தை ஏற்படுத்தும் இந்தத் தோல்வியுற்ற அமைப்பை ஏன் நிலைநிறுத்த வேண்டும்" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்நிலையில், சத்குருவின் தீவிர பக்தையும் நடிகையுமான காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில், இதைப் பார்க்கையில் இதயம் நொறுங்குகிறது. நமது அழகான கட்டடக்கலை, பாரம்பரியம், மரபுகள், கலாசாரத்தை நாம் பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details