தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை: 'இந்தியன் 2' விபத்து குறித்து உருக்கமான ட்வீட் வெளியிட்ட காஜல் அகர்வால்! - kamal hassan's indian 2

'இந்தியன் 2' விபத்து குறித்து நடிகை காஜல் அகர்வால் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியன் 2 விபத்து குறித்து உருக்கமான ட்வீட் வெளியிட்ட காஜல் அகர்வால்
இந்தியன் 2 விபத்து குறித்து உருக்கமான ட்வீட் வெளியிட்ட காஜல் அகர்வால்

By

Published : Feb 20, 2020, 7:54 PM IST

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் ’இந்தியன் 2’ படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம்ஸ் சிட்டியில் நடைப்பெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்றிரவு படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக விபத்து நடைப்பெற்றது. இந்த விபத்தில் படக்குழுவைச் சேர்ந்த கிருஷ்ணா, சந்திரன், மது ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து நடிகை காஜல் அகர்வால் டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ’என்னுடன் பனியாற்றியவர்களின் எதிர்பாராத மரணத்தை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இறந்த கிருஷ்ணா, சந்திரன், மது ஆகியோரின் குடும்பத்திற்கு கடவுள் மனவலிமையைக் கொடுக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

மற்றோர் பதிவில், ‘நேற்று நடந்த கிரேன் விபத்திலிருந்து மீளமுடியாமல் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் இருந்தேன். இந்த ட்வீட் பதிவு செய்ய ஒரு நொடி தான் தேவைப்பட்டது. அந்த ஒரு தருணத்திற்கு நன்றியுடன் இருக்கிறேன். வாழ்க்கை, நேரம் குறித்து நேற்று நிறைய கற்றுக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கமல், காஜல் நடித்த இடத்தில் விபத்து - 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details