தமிழில் பரத் நடிப்பில் வெளியான 'பழனி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், நடிகை காஜல் அகர்வால். அதன்பின், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகர்களின் படத்தில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருகிறார். இவர் தற்போது கமல் ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தில் நடித்துவருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் மும்பை தொழிலதிபரான கௌதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் கணவருடன் தேனிலவுக்கு சென்ற காஜல் அகர்வால் அதன்பின் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான 'லைவ் டெலிகாஸ்ட்' வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.