சென்னை: படப்பிடிப்பு இல்லாததால் வீட்டில் தொட்டில் கட்டி அதில் குழந்தை போல் அமர்ந்து ஆடிய காணொலியை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
கரோனா அச்சுறுத்தலால் கிட்டத்தட்ட அனைத்துவிதமான பணிகளும் முடங்கிப்போயுள்ள நிலையில், திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டிருகின்றன.
இதனால் திரை பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இதையடுத்து தங்களது நேரத்தைப் போக்க சமூக வலைதளங்களில் ஏதாவது வித்தியாசமான காணொலி, புகைப்படங்கள், பதிவுகள் எனப் பலரும் பதிவிட்டுவருகிறார்கள்.
அந்த வகையில், நடிகை காஜல் அகர்வால் வேடிக்கையான காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். உடற்பயிற்சி மேற்கொள்ள எண்ணிய அவர், உடற்பயிற்சி கூடங்கள் மூடியிருப்பதால் வீட்டிலேயே அதைச் செய்ய நினைத்துள்ளார்.
இதற்காகத் தனது வீட்டில் தொட்டில் போன்று துணியைக் கட்டிய அவருக்கு, குழந்தைப் பருவம் நினைவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்தத் தொட்டிலில் குழந்தைபோல் அமர்ந்து ஆடிய சிறிய காணொலி பகுதியை வெளியிட்டுள்ளார்.
அதில், "பாதுகாப்பாகவும், சுகாதாரத்துடனும் உடற்பயிற்சி செய்வதற்கு சிறந்த வழி இதுதான். தற்போது உடற்பயிற்சி கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் நமது அன்றாட வாழ்க்கையை அப்படியே விட்டுவிட வேண்டும் என்ற அர்த்தமில்லை.
தற்போது நான் வீட்டிலிருந்தே வேலை செய்கிறேன். அதற்காகத் தொட்டிலில் அமர்ந்து ஆடுகிறேன் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம்" என்று குறும்புத்தனமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் காஜல் அகர்வால், தற்போது படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் வீட்டில் பொழுதைக் கழிக்கிறார்.
இதையும் பாருங்கள்: சித்ரா தேவி பிரியா காஜலின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு