சென்னை: 'அசுர காதல்' என்ற பெயரில் தயாராகியுள்ள மியூசிக்கல் வீடியோ பாடலை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார்
பெண்களுக்கு எதிராக பல விதமான பின்னணியில் இல்லங்களில் நிகழ்த்தப்படும் வன்முறையைக் கூறுவதாக அமைந்திருக்கும் இந்த வீடியோவை டிகே உருவாக்கியுள்ளார். இதையடுத்து இப்பாடலை நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்தப் பாடல் குறித்து இயக்குநர் டிகே கூறியதாவது:
சமூகத்துக்குத் தேவையான அழுத்தமான கருத்தைச் சொல்லும் 'அசுர காதல்' பாடலை வெளியிட காஜல் அகர்வால் தான் சரியானவர் என்பது, எங்கள் மொத்தக் குழுவின் கருத்தாக இருந்தது. ஏனென்றால் சினிமாவிலும் சரி, இயல்பு வாழ்க்கையிலும் சரி, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எப்போதும் குரல் கொடுத்து வருபவராக அவர் உள்ளார்.
'அசுர காதல்' பாடலின் தன்மையைப் புரிந்துகொண்டு வெளியிட்டமைக்கு நடிகை காஜல் அகர்வாளுக்கு நன்றி. எங்கள் பாடலை அவர் வெளியிட்டது அனைவருக்கும் பெருமை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.