தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவில் காஜல் சிறப்புத் தொழுகை - இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் தோற்றம்

இந்தியன் 2 பட ஷுட்டிங்கில் பங்கேற்க ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ள நடிகை காஜல் அகர்வால், அங்குள்ள அஜ்மீர் தர்காவில் சிறப்புத் தொழுகை மேற்கொண்டுள்ளார்.

அஜ்மீர் தர்காவுக்கு தாயுடன் சென்ற காஜல் அகர்வால்

By

Published : Nov 12, 2019, 9:17 AM IST

Updated : Nov 12, 2019, 8:23 PM IST

அஜ்மீர்: உலகப் புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு தனது தாயுடன் சென்று நடிகை காஜல் அகர்வால் தொழுகை மேற்கொண்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் ஒரு சில இந்திப் படங்களிலும் தலை காட்டிவருகிறார்.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கிறார் காஜல் அகர்வால். படத்தில் அவர் 85 வயது பாட்டியாக தோன்றுவதாக தகவல்கள் வெளியான நிலையில், அது சஸ்பென்ஸ் என சுருக்கமாக முடித்தார் காஜல்.

அஜ்மீர் தர்காவில் காஜல் சிறப்புத் தொழுகை

இதையடுத்து இந்தியன் 2 பட ஷுட்டிங்கில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான் சென்றுள்ளார் காஜல் அகர்வால். அங்குள்ள உலகப் புகழ் பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு தனது தாயுடன் சென்ற அவர், சிறப்புத் தொழுகை மேற்கொண்டார்.

இஸ்லாமிய ஞானியான காஜா முகைதீன் சிஷ்தி அமைந்துள்ள இந்த தர்காவில், சினிமா வாழ்க்கையில் மேன்மேலும் வெற்றியை பெற வேண்டியும் தொழுகை செய்துள்ளார்.

முன்னதாக, காஜல் அகர்வால் மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட அவருடன் வந்தவர்களை தர்காவின் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், தலையில் சுமந்தபடி தான் கொண்டு வந்த மலர்களை அவர் காணிக்கையாக செலுத்தினார்.

இதையடுத்து காஜல் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு வெல்வெட் போர்வை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

Last Updated : Nov 12, 2019, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details