காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் போடாத புகைப்படத்தை வெளியிட்டு அதற்கான காரணத்தை பதிவிட்டுள்ளார். அதில்,மக்கள் இனி தங்களையே இனம் கண்டறிய முடியாது. ஒருவேளை நாம் உடல்ரீதியாக ஈர்க்கப்படுகிற ஒரு உலகில் வாழ்கிறோம் அல்லது சமூக வலைதளங்கள் நமது சுயத்தை விழுங்கி அது யாரை மதிக்கிறது, எதைப் பற்றி புகழ்பாடுகிறது என்பதை காண்கிறோம் .
ஒப்பனை உடலை அழகாக்கும்... மனதை? : வைரலாகும் காஜல் புகைப்படங்கள் - பியூட்டி
காஜல் அகர்வால் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உடல் அழகு குறித்து உறுதியளிக்கும் அழகுசாதனப் பொருட்களை வாங்க கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது. தற்பெருமை அனைத்து இடத்திலும் காணப்படுகிறது, இந்தக் கோடுகள் நடுவே நாம் அந்தக் கூட்டத்தில் இணைய முயற்சி செய்கிறோம் அல்லது அதனை விட்டு வெளியேறியதாக உணர்கிறோம்.
நாம் நம்முடைய மற்றொரு பிம்பத்தை பெறுவதற்கு முயற்சி செய்வதைவிட நமது உண்மையான சுயத்தை ஏற்றுக்கொண்டால்தான் நாம் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும். ஒப்பனை உடலை அழகாக்கும், நம் குணத்தையும் நாம் யார் என்பதையும் கட்டமைக்குமா?, நம்மிடம் உள்ள அழகை அப்படியே ஏற்றுக்கொள்வதில்தான் அழகு உள்ளது என குறிப்பிட்டுள்ளார். காஜல் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.