தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'ஆச்சார்யா' படப்பிடிப்பில் காஜல் அகர்வால்: வரவேற்ற சிரஞ்சீவி! - சிரஞ்சீவி லேட்டஸ் செய்திகள்

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும் 'ஆச்சார்யா' படப்பிடிப்பில் கலந்துகொண்ட புதுமண தம்பதி காஜல் அகர்வால், அவரது கணவரை படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

chiranjeevi
chiranjeevi

By

Published : Dec 15, 2020, 1:31 PM IST

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 152ஆவது படமான 'ஆச்சார்யா' படத்தை கொரட்லா சிவா இயக்குகிறார். ராம்சரணின் கோணிடெலாவும், மேட்னி என்டர்டெயின்மென்ட்டும் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

இந்த்ப படத்தின் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. இதற்கிடையில் கரோனா தொற்று அச்சம் காரணமாக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது படப்பிடிப்பிற்கு அரசு அனுமதி வழங்கிய நிலையில், ஆச்சார்யா படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

இன்று (டிசம்பர் 15) காஜல் அகர்வால் தனது கணவருடன் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். முன்னதாக புது தம்பதியை படக்குழுவினர் கேக் வெட்டியும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். சிரஞ்சீவியும் இருவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. ஏற்கெனவே காஜல் அகர்வால், சிரஞ்சீவி ஜோடியாக அவரது 150ஆவது படமான 'கைதி நம்பர் 150' (கத்தி ரீமேக்) படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details