தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டாரா காஜல் அகர்வால்? - காஜல் அகர்வால் நிச்சயதார்த்தம்

மும்பை: நடிகை காஜல் அகர்வாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

By

Published : Aug 18, 2020, 12:58 PM IST

தமிழில் பரத் நடிப்பில் வெளியான 'பழநி' திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர், நடிகை காஜல் அகர்வால். அதன்பின், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகர்களின் படத்தில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

காஜல் அகர்வால் தற்போது மும்பை தொழிலதிபரான கௌதம் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

முன்னதாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற காஜல் அகர்வால் 2020ஆம் ஆண்டு, பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை செய்துகொள்ள இருப்பதாக தெரிவித்திருந்தார்.

காஜல் அகர்வால் தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதை அடுத்து, அவரது திருமணம் குறித்து வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என காஜல் அகர்வால் தரப்பு தெரிவிக்கின்றன.

காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்திலும் தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் 'ஆச்சாரியா' திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details