இந்தியாவில் கரோனா தொற்று காரணமாக மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அனைத்து வித படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுமாறு அந்தந்த சங்கங்கள் திரை பிரபலங்களிடம் கேட்டனர்.
அந்த வகையில், கரோனா தடுப்பு நிதியாக 6 லட்சம் ரூபாயை நடிகை காஜல் அகர்வால் வழங்கியுள்ளார். அதில் ஃபெப்சி சங்கத்திற்கு ரூ. 2 லட்சமும் பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சமும் மகாராஷ்டிரா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 லட்சமும் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 2 லட்சமும் வழங்கினார். அதுமட்டுமல்லாது ஏழை எளிய மக்களுக்கு உணவுகளும் வழங்கிவருகிறார்.
இந்நிலையில், படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் இருக்கும் காஜல் அகர்வால் சமூகவலைதளப்பக்கத்தில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் "கடந்த மூன்று நாள்களாக என் கைகள் பார்த்த ஆல்கஹாலை அளவைப்போல் என்னுடைய லிவர் இந்த வாழ்நாளில் பார்த்தது இல்லை" என ட்வீட் செய்திருந்தார்.
இதனையடுத்து தற்போது படப்பிடிப்பு இல்லாததால் ஆந்திர உணவுகளை மிஸ் செய்வதாக கூறி ஆந்திர உணவுகளை சமைத்து அதன் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "எனது படப்பிடிப்பு தளத்தை மிகவும் மிஸ் செய்கிறேன். இதனால் ஆந்திர உணவுகளை எனது இரவு உணவாக எடுத்துக்கொள்ள முடிவு செய்தேன். அதன்படி வெண்டைக்காய் புலுசு, சுரக்காய் பச்சடி, பெசரட்டு போன்ற ஆந்திரா உணவுகளை முதல்முறையாக முயற்சி செய்துள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.