அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்தவர் நடிகை காஜல் அகர்வால்.
தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
காஜல் அகர்வால் நடிப்பில் அடுத்தாண்டில் 'பாரிஸ் பாரிஸ்', 'மொசகல்லு', 'மும்பை சாகா', 'இந்தியன் 2' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் புத்தாண்டு நெருங்குவதையொட்டி காஜல் அகர்வால் தனது சகோதரியும் நடிகையுமான நிஷா அகர்வால் மற்றும் குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்றிருக்கிறார்.