தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’ஹிட் கொடுக்கலனா என்ன இப்போ? கதை ஓகே’ - காஜல் அகர்வால் பளீச் - சினிமா செய்திகள்

டீ.கே. இயக்கத்தில் கதாநாயகியாக நடித்து வெளியான ’கவலை வேண்டாம்’ திரைப்படம் ஹிட் கொடுக்காதபோதும், ஹாரர் வகை திரைப்படத்தின் திரைக்கதை பிடித்ததன் காரணமாக மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க நடிகை காஜல் அகர்வால் ஒப்புக் கொண்டுள்ளார்.

காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்

By

Published : Jun 25, 2021, 12:19 PM IST

’யாமிருக்க பயமே’ திரைப்படத்தின் வெற்றியினால் பிரபலமானவர் இயக்குநர் டீ.கே. இவர் காஜல் அகர்வாலை கதாநாயகியாக வைத்து இயக்கிய ’கவலை வேண்டாம்’ திரைப்படம் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் லைவ் டெலிகாஸ்ட் என்கிற வெப் சீரிஸில் நடித்து, சென்னை லீலா பேலஸில் ஓய்வில் இருந்த நடிகை காஜல் அகர்வாலை, இயக்குநர் டீ.கே. சந்தித்திருக்கிறார். அப்போது டீ.கே. கூறிய ஹாரர் திரைக்கதையில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் காஜல்.

ஏற்கனவே இயக்கிய திரைப்படத்தில் ஹிட் கொடுக்காத இயக்குநரின் கதைக்கு மறுபடியும் சம்மதிக்க வேண்டாம் எனப் புலம்பியிருக்கின்றனர் காஜலின் நலன் விரும்பிகள். அதற்கு, “ஹிட் கொடுக்காவிட்டால் என்ன, எனக்கு கதைப் பிடித்திருக்கிறது’ எனக் கூறியுள்ளார் காஜல் அகர்வால்.

இதையும் படிங்க: புன்னகைப்பூ பூஜாவுக்கு பிறந்தநாள்

ABOUT THE AUTHOR

...view details