தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கைதி' டீசரை விடுதலையாக்கும் படக்குழு..! - கார்த்தி

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் 'கைதி' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

File pic

By

Published : May 25, 2019, 9:16 AM IST

2017ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ’மாநகரம்’. அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் பாராட்டுக்களை குவித்தது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி நடிப்பில் 'கைதி' என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங், எடிட்ங், உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன.

நாயகி, பாடல், ரொமான்ஸ், காமெடி என எதுவுமே இல்லாத இந்த படம் ஒரே ஒரு இரவில் நடக்கும் காட்சிகளை மையமாக கொண்டு உருவாகுவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த படத்தில், ’சித்திரம் பேசுதடி’ நரேன், யோகி பாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர், ’தலைவாசல்’ விஜய் ஆகியோர் நடித்துள்ளானர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் மே 30ஆம் தேதி வெளியாகும் என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details