தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தீபாவளிக்கு விடுதலையாகும் 'கைதி' கார்த்தி - பிகில்

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

kaithi

By

Published : Aug 27, 2019, 6:08 PM IST

'மாநகரம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து 'கைதி' என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் கார்த்தி ஜோடியாக கதாநாயகிகள் யாரும் இல்லை. இப்படம் முழுவதும் ஒரு நாள் இரவில் சிறையில் இருந்து தப்பிக்கும் கைதியைப் பற்றிய கதை என்று கூறப்படுகிறது. இப்படத்தில் கார்த்தியுடன் நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

'கைதி' அக்டோபர் மாதம் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அப்டேட் ஒன்றை வெளியிட்டிருந்தது. தற்போது இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த வருட தீபாவளி ரேஸில் விஜய்யின் 'பிகில்', விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' இருக்கும் நிலையில் தற்போது கார்த்தியின் 'கைதி' ரேஸில் கலந்து கொண்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் இப்போதே தீபாவளியை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details