தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘லாரி ஒட்டுவது எனக்கு பிடித்தமான ஒன்று’ - 'கைதி' கார்த்தி ஓப்பன் டாக்!

'கைதி' படத்தில் தான் ஒரு பகுதிதான் என்றும், இது ஒரு மல்ட்டி ஸ்டாரர் படம் எனவும் நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

kaithi

By

Published : Oct 8, 2019, 5:44 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கைதி'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கார்த்தி, லோகேஷ் கனகராஜ், நரேன், இசையமைப்பாளர் சாம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ‘இது எனக்கு இரண்டாவது படம். நாயகி இல்லாமல், கமர்ஷியல் இல்லமால் படம் பண்றது எப்படின்னு எல்லோரும் கேட்டாங்க. தமிழ் சினிமால இத உடைக்க முடியாதோனு நினைச்சேன். ஆனால் கார்த்தியிடம் கதை சென்னவுடன் அவர் ஸூட்டிங் போகலாம்னு சென்னாரு. இந்த படம் உருவாக அவருதான் காரணம்.

கைதி பத்திரிகையாளர் சந்திப்பு

குறுகிய காலகட்டத்தில எடுக்கப்பட்ட இப்படத்தில உழைச்ச எல்லோருமே மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளனர். இந்த படம் ஒரு தியேட்டர் அனுபவமாக இருக்கும். பாருங்க பிடிக்கும்’ என்றார்.

தொடர்ந்து நடிகர் கார்த்தி பேசுகையில், ‘மெட்ராஸ், தீரன், மாதிரி தான் “கைதி”. ஒரு கேரக்டர பத்தி தெரிஞ்சுக்கிட்டு பண்ற படங்கள் ரொம்ப பிடிக்கும். ஆடியன்ஸுக்கு படம் எப்படி கொடுக்கனும்னு தெரிஞ்சவர் டைரக்டர் லோகேஷ். முழுக்க முழுக்க இரவு நேரங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

நரேன் கூட நடிச்சது சந்தோஷமான விசயம். எப்போதும் வாழக்கையில் எனை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர் அவர். ஒவ்வொரு கேரக்டரும் இந்தப்படத்தில வித்தியாசமானதாக இருக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு பகுதி தான். இது ஒரு மல்டி ஹீரோ படமாக இருக்கும். எனக்கு லாரி ஓட்டுறது ரொம்ப பிடிக்கும்.

இந்தப்படத்தில எனக்கு பழைய லாரிய கொடுத்துட்டாங்க. லாரி ஓட்டுறது எவ்வளவு கஷ்டம்னு அப்பதான் தெரிஞ்சுது. எனக்கு இந்தப்படத்தில் நிறைய விசயங்கள் புதுசா கத்துக்க முடிஞ்சுது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும்’ என்றார்.

இதையும் வாசிங்க: ''கைதி' படத்தில் நான் சின்ன பகுதிதான்' - நடிகர் கார்த்தி பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details