தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விருமாண்டி, டை-ஹார்ட் பட இன்ஸ்பிரேஷன்தான் 'கைதி' - லோகேஷ் கனகராஜ் - டை ஹார்ட் இன்ஸ்பிரேஷனாக கைதி

தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் 'பிகில்', 'கைதி' ஆகிய இரண்டு படங்களும் ஜெயிக்க வேண்டும். இரண்டையும் தவறாமல் பாருங்கள் என 'தளபதி64' படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

By

Published : Oct 24, 2019, 10:50 PM IST

'மாநகரம்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்தி நடிப்பில் 'கைதி' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் தீபாவளி ஸ்பெஷலாக நாளை (வெள்ளிக்கிழமை) ரிலீஸாகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது 'தளபதி64' படத்தை அவர் இயக்கி வருகிறார்.

இதையடுத்து கைதி பட வெளியீட்டை முன்னிட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பத்திரைகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

'மாநகரம்' படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது மீடியாவாகிய நீங்கள்தான். 'கைதி' முடியும் போதே எனது அடுத்த பட வேலைகள் ஆரம்பித்துவிட்டன. அதனால் உங்களை சந்திக்க முடியவில்லை. இந்த தீபாவளி தின வாழ்த்துக்களோடு உங்களை இன்று சந்திக்கிறேன் என்றார்.

பத்திரிகையாளர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்றி

இதைத்தொடர்ந்து தொடர்ந்து பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை அவரிடம் கேட்டனர். பத்திரிகையாளர்களின் கேள்வியும், பதிலும் பின்வருமாறு,

'கைதி' படத்தில் ஏன் ஹீரோயின் இல்லை?

இந்தப் படம் ஆரம்பிக்கும்போதே ஹிரோயின் தேவைப்படவில்லை. அதற்கான இடம் படத்தில் இல்லை. படம் பார்த்தால் உங்களுக்கும் புரியும்.

கதைக்கு ஹீரோயினுக்கான தேவை இல்லை

நீங்கள் இயக்கியிருக்கும் இரு படங்களும் இரவில் நடப்பதாக இருக்கிறதே...இரவின் மீது அப்படி என்ன காதல்?

இரவுகளில் படம் எடுப்பது என திட்டமிட்டு அப்படி செய்யவில்லை. 'மாநகரம்' எடுத்தபின் வேறொரு படம் செய்வதாக இருந்தேன். அதை செய்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. மற்றபடி அடுத்த படம் இந்தக் கேள்வியை மாற்றும் என நம்புகிறேன்.

கதை முழுவதும் இரவில் நடக்கும் சம்பவம்தான்

'கைதி' படத்தில் கார்த்தி என்ன மாதிரி கதாபாத்திரத்தில் வருகிறார்?

படத்தில் கார்த்தியை மையப்படுத்திதான் கதை. ஹீரோயின் இல்லை எனும் போது அவரைச் சுற்றிதான் எல்லாமும் நடக்கும். இந்தப் படத்துக்கான லுக் ரெடியாகும்போதே அவரது லுக் 'பருத்திவீரன்' தோற்றம் போல இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அது எங்கேயும் படத்தில் வந்துவிடக்கூடாது என உழைத்திருக்கிறோம். அவர் ஒத்துக்கொண்டதால்தான் இந்தப் படமே உருவானது.

கார்த்தியின் கதாபாத்திரம் மற்றும் லுக்

படத்தின் கதையை சொன்னவுடனே கார்த்தி நடிக்க சம்மதம் தெரிவித்தார். மற்றபடி ஹீரோயின் இல்லை, காமெடி இல்லை என எதுவும் கேட்கவில்லை. அவர் ஒத்துழைப்பு அபாரமானது.

இந்தக் கதை முதலில் வேறொரு ஹீரோவுக்காக ரெடியானதா? படத்தின் பாதிப்பு எங்கிருந்து உருவானது?

திரைக்கதையாக ரெடியானவுடன் மன்சூர் அலிகானை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் தயாரிப்பாளர் கார்த்தி வைத்து நடிக்க வைக்கலாம் என கூறியபோது அவரை அனுகினோம். இப்படம் ஹாலிவுட்டில் வந்த 'டை ஹார்ட்' , கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படங்களின் இன்ஸ்பிரேஷன் எனச் சொல்லலாம்.

மன்சூர் அலிகானை ஹீரோவாக நடிக்க வைக்க நினைத்தேன்

படத்தில் பெண் கதாப்பாத்திரங்களே இல்லையா?

பெண் கதாப்பாத்திரங்களே இல்லை என்பது நிஜம் அல்ல. இதில் மூன்று முக்கியமான பெண் கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். கதாநாயகிக்கான தேவை இல்லை. அதனால் இதில் வைக்கவில்லை. மொத்தப் படமும் இரவில் நாலு மணி நேரத்தில் நடப்பதால் அதற்கான இடம் படத்தில் இல்லை அவ்வளவுதான்.

இரவில் ஷுட் செய்தது எப்படி இருந்தது?

இரவில் படம் எடுப்பது சவாலாகத்தான் இருந்தது. இரவு 8 மணிக்குத்தான் முதல் ஷாட்டே வைப்போம். இரவு முழுக்க ஷூட்டிங் என்பதே கஷ்டம்தான். நல்ல டீம் அமைந்ததால் படமும் சிறப்பாக வந்துள்ளது.

கார்த்தி மற்றும் படக்குழுவினர்கள் அபார ஒத்துழைப்பு

'தளபதி64' என்ன மாதிரி படம்?

விஜய் படம் பற்றி மற்றொரு தருணத்தில் பேசுகிறேன், அது இப்போதுதான் ஆரம்பகட்ட பணிகளில் இருக்கிறது. அதைப்பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.

விஜய் 'கைதி' படத்தைப் பார்த்து விட்டாரா?

'கைதி' படத்தை இன்னும் அவர் பார்க்கவில்லை. இப்போதுதான் வேலைகளே முடிந்தது. என் தயாரிப்பாளரே இன்னும் பார்க்கவில்லை. இனிமேல்தான் எல்லோரும் பார்ப்பார்கள்.

தீபாவளிக்கு 'பிகில்' படம் வருகிறதே. கைதி, பிகில் படங்களில் எது ஜெயிக்க விருப்பம்?

தீபாவளிக்கு இரண்டு படங்கள் வருகிறது. இரண்டுமே ஜெயிக்க வேண்டும்தான். 'பிகில்', 'கைதி' இரண்டும் படங்களையும் பாருங்கள்.

இவ்வாறு லோகேஷ் கனகராஜ் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details