தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

உங்களுக்காக 'டில்லி' மீண்டும் வருவான் - 'கைதி' கார்த்தி ட்வீட்! - கைதி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்

என் மீது அளவற்ற அன்பு செலுத்தும், என்னுடைய எல்லா ஏற்ற தாழ்வுகளிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் சகோதர சகோதரிகளை எப்போதும் பெருமைப்படுத்துவேன் என கார்த்தி தெரிவித்துள்ளார்.

karthi

By

Published : Nov 4, 2019, 8:39 PM IST

நடிகர் கார்த்தி-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் திரைக்கு வந்துள்ள படம் ’கைதி’. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

'மாநகரம்' திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். படம் பார்த்த அனைவருக்கும் 'கைதி’ டில்லியை பிடித்துப்போய்விட்டது. அந்த அளவுக்கு இப்படத்தில் கார்த்தி தனது நடிப்பால் பார்வையாளர்களை மிரட்டியிருப்பது அவரை அடுத்த கட்டத்துக்கு கூட்டிச்சென்றுள்ளது. தந்தை மகள் பாசத்திற்கு இடையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனியில் அமரவைத்தது. இந்தப் படத்தில் நடிகர்கள் நரேன், ஜார்ஜ் மரியான், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவான இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்தது.

'கைதி' கார்த்தி ட்வீட்

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என லோகஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தற்போது கார்த்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், என் மீது அளவற்ற அன்பு செலுத்தும், என்னுடைய எல்லா ஏற்ற தாழ்வுகளிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் சகோதர சகோதரிகளை எப்போதும் பெருமைப்படுத்துவேன். உங்களுக்காக டில்லி மீண்டும் வருவான் என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க: விபூதி பூசாமல் கிளம்பினதில்ல - ‘கைதி’ பட்டை பற்றி கார்த்தி

ABOUT THE AUTHOR

...view details