தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கைதி வசூல்: அண்ணன் சூர்யாவை தொடர்ந்து தம்பி கார்த்தி புதிய சாதனை! - ngk Box Office Collection

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

kaithi

By

Published : Nov 13, 2019, 8:18 PM IST

Updated : Nov 13, 2019, 8:34 PM IST

தீபாவளி ரேஸில் 'பிகில்' படத்துடன் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'கைதி'. கார்த்தி நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது, பாட்டு கிடையாது. ஆனால் இவற்றை போக்கும் விதமாக அதிரடி ஆக்‌ஷன், செண்டிமென்ட் என தனது அற்புதமான நடிப்பால் ஸ்கோர் செய்து 'டில்லி' கார்த்தி கைதட்டல் வாங்கியுள்ளார்.

'கைதி' டில்லியும் காமாட்சி லாரியும்

'மாநகரம்' திரைப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். படம் பார்த்த அனைவருக்கும் 'கைதி’ டில்லியை பிடித்துப்போய்விட்டது.

இது ஒருபுறமிருக்க படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, பின்னணி இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட இதர டெக்னிக்கல் விஷயங்கள், சிறு வேடங்களில் தோன்றிய நடிகர்களின் பங்களிப்பு என அனைத்தும் சிறப்பாக அமைந்திருக்கிறது என பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

கைதி பட நடிகர்கள்

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியான கைதி, இரண்டிலும் ஹிட்டாகியுள்ளது. தற்போது இப்படம் வசூலில் ரூ. 100 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கார்த்தி நடிப்பில் வெளியாகி வசூலில் ரூ. 100 கோடியை தாண்டிய முதல் படம் 'கைதி' என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்தது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த இரண்டாவது படம் 'கைதி'. இதற்கு முன்பு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே(NGK) ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

பிரியாணி சாப்பிடும் 'கைதி டில்லி'

அண்ணன் 'என்ஜிகே' சூர்யாவை தொடர்ந்து தம்பி 'கைதி' கார்த்தி இந்த சாதனையை புரிந்துள்ளார். கார்த்தி தற்போது 'சுல்தான்' என்னும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 'கைதி 2' படத்தையும் இந்தத் தயாரிப்பு குழுவே தயாரிக்கும் என்று தயாரிப்பு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே: உங்களுக்காக 'டில்லி' மீண்டும் வருவான் - 'கைதி' கார்த்தி ட்வீட்!

Last Updated : Nov 13, 2019, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details