மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குருவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தமிழ்த்தாய் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்துக்கு 'மாவீரன் காடுவெட்டியார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மேற்பார்வையில் திரைப்படத்தின் கதைக் களம் உருவாக்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில் காடுவெட்டி கதாப்பாத்திரத்தில் ஆர்கே சுரேஷ் நடிக்கவுள்ளார்.