ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் சார்பில் மலர்க்கொடி முருகன் தயாரிக்கும் படம் 'காதல் முன்னேற்ற கழகம்.' இப்படத்தில் இயக்குநர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி பாண்டியராஜன், நடிகை சாந்தினி, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மாணிக் சத்யா இப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
'காதல் முன்னேற்ற கழகம்' படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு - இயக்குநர் மாணிக் சத்யா
பாண்டியராஜன் மகன் பிரித்வி பாண்டியராஜன் நடித்துள்ள 'காதல் முன்னேற்ற கழகம்' திரைப்படம், வரும் 5ஆம் தேதி வெளியாகிறது என்று படத்தின் இயக்குநர் மாணிக் சத்யா தெரிவித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குநர் மாணிக் சத்யா கூறுகையில், "காதல் முன்னேற்ற கழகம் திரைப்படம் 80 காலக்கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகராக பிருத்திவி பாண்டியராஜன் நடித்துள்ளார். அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு செய்யும் அலப்பறைகள் ரசிக்கும்படி இருக்கும்.
சாந்தினி டீச்சராக நடித்துள்ளார். துரோகம் எல்லோர் வாழ்விலும் நடக்கிறது. ஆனால் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக கொடூரமானது. அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். ஜூலை 5 ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும்" என்றார்.