தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

25 years of காதல் கோட்டை: மறக்க முடியாத சூர்யா - கமலி - தேவயானி

காதல் கோட்டை திரைப்படம் வந்து நாளையோடு 25 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Kadhal Kottai 25 years
Kadhal Kottai 25 years

By

Published : Jul 11, 2021, 3:38 PM IST

அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் ‘காதல் கோட்டை’. ஹீரா, மணிவண்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்டோரும் இதில் நடித்திருந்தனர்.

1996ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஹீரோ - ஹீரோயின் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே காதலிப்பார்கள். பார்க்காமல் காதல் என்ற கான்செப்ட் அப்போது தமிழ் சினிமாவுக்கு புதிது.

25 years of காதல் கோட்டை:

சூர்யா என்ற கதாபாத்திரத்தில் அஜித்தும், கமலி என்ற கதாபாத்திரத்தில் தேவயானியும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். சூர்யா எப்படியாவது கமலியை சந்தித்துவிட வேண்டும், அவர்களின் காதல் கைகூட வேண்டும் என ரசிகர்களை ஏங்க வைத்துவிடுவார் இயக்குநர் அகத்தியன். சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்கம் என மூன்று தேசிய விருதுகளை வாங்கிக் குவித்தது காதல் கோட்டை.

தேவாவின் இசை படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாற்றியது. அதேபோல் தங்கர்பச்சானின் ஒளிப்பதிவு, மணிவண்ணனின் காமெடி என படத்தில் சிலாகிக்க ஏராளமான விஷயங்கள். நாளையோடு இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைகிறது; இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க:இன்னைக்கி வலிமை அப்டேட் வந்துரும்!

ABOUT THE AUTHOR

...view details