தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நீங்க விளையாடினது என்கிட்ட அல்ல... எமன்கிட்ட..! - மிரட்டும் 'கடாரம் கொண்டான்' டிரைலர் - கமல்ஹாசன் தயாரிப்பு

கமல் தயாரிப்பில் மிரட்டலான கெட்டப்பில் விக்ரம் நடித்திருக்கும் 'கடாரம் கொண்டான்' படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடயே வரவேற்பு பெற்று வருகிறது.

கடாரம் கொண்டான்

By

Published : Jul 3, 2019, 8:38 PM IST

தூங்காவனம் படத்திற்கு பிறகு ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'கடாரம் கொண்டான்'. இந்த படத்தை கமல்ஹாசனின், ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விக்ரம் காவல்துறை அலுவலராக நடித்துள்ளார். இவருடன் அக்சரா ஹாசன், லீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, விக்ரமை வித்தியாசமான கோணத்தில் ரசிக்க வைத்தது. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டும் விக்ரம், இப்படத்தில் கெட்டப்பை மாற்றி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அனைத்து தரப்பினரையும் வியக்க வைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. காவல்துறை அலுவலராக வரும் விக்ரம் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கடாரம் கொண்டானாக துப்பாக்கி தோட்டாக்கள் தெறிக்க மாஸான எண்ட்ரி தரும் விக்ரம், 'நீ விளையாடுறது என்கிட்ட இல்ல எமன்கிட்ட' என்று கூறும் வசனங்கள் அற்புதம். படத்தின் டிரெய்லருக்காக மரண வெயிட்டிங்கில் காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் நடிப்பால் ஈர்த்துள்ளார்.

சாமி ஸ்கோயர் தந்த தோல்வியை கடாரம் கொண்டான் மீட்டு தரும் என்பது படத்தின் ட்ரெய்லர் உறுதிப்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details