தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விக்ரம் பிறந்த நாளுக்காக கடாரம் கொண்டான் படக்குழு அளித்த கிப்ட்! - vikram

நடிகர் விக்ரமின் பிறந்தநாள் பரிசாக கடாரம் கொண்டான் படக்குழு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீயான் விக்ரம்

By

Published : Apr 17, 2019, 9:09 AM IST

இயக்குநர் ஹரி - நடிகர் விக்ரம் கூட்டணியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் சாமி. பரபரப்பான திரைக்கதை, கெத்தான விக்ரமனின் நடிப்பு, ஹரியின் மசாலா இயக்கம், ஹரிஸ் ஜெயராஜின் இசை என படம், இரண்டரை மணிநேரம் ரசிகனை எங்கும் போகவிடாமல் கட்டிப்போட்ட படம்.

தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகம் ஜூரம், இந்த படத்தையும் விட்டு வைக்கவில்லை. ஐஸ்வர்யா, பாபி சிம்ஹா என புதிய கூட்டணியில் படமும் தயாராகி வெளியானது. இறுதியாக வெளிவந்த விக்ரமனின் சாமி-2 படம் படுதோல்வியை அடைந்தது.

கடாரம் கொண்டான்

தற்போது கண்டிப்பாக ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விக்ரம் இருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய நிறுவனத்தில் நடிக்க வேண்டும் எனும் கமலின் அன்பு வேண்டுகோளை ஏற்றார் விக்ரம். அப்படத்திற்கு கடாரம் கொண்டான் என்று தலைப்பிட்டனர். கமலை வைத்து தூங்காவன் படத்தை கொடுத்த ராஜேஷ் செல்வா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் முழுப்படப்பிடிப்பும் முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. அனைத்து பணிகளையும் முடித்து விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விக்ரம் தனது 53வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது திரை நட்சத்திரங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விக்ரமின் பிறந்தநாள் பரிசாக, கடாரம் கொண்டான் படக்குழு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டருக்காக, முறுக்கேறிய உடம்புடன், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலாக புகை விட்டப்படி விக்ரமனின் போட்டோ ஷூட் நடத்தியதையும், படப்பிடிப்பில் நடந்த விசயங்களையும் இணைத்து வீடியோவை வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் கடாரம் கொண்டான் படக்குழு. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடாரம் கொண்டான் மேக்கிங் வீடியோ

ABOUT THE AUTHOR

...view details