சாமி-2 படத்திற்கு பிறகு 'கடாரம் கொண்டான்' எனும் படத்தில் சீயான் விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, 'கடாரம் கொண்டான்' படத்தை இயக்குகிறார். கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசனும் நடித்துள்ளார்.
உழைப்பாளர் தினத்தில் சீயான் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு! - single track release
நடிகரும், அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் 'கடாரம் கொண்டான்' படத்தின் சிங்கிள் ட்ராக், மே1 ஆம் தேதி வெளியாகிறது.
மலேசியாவில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் போஸ்டு புரோடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தின் பாடல்களை விவேகா எழுதியுள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார். இந்நிலையில், படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
'கடாரம் கொண்டான்' படத்தின் சிங்கிள் ட்ராக், உழைப்பாளர் தினமான மே.1ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இந்த சிங்கிள் ட்ராக்கை கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இப்படத்தில், பாடலை பாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அனைத்து பணிகளும் முடித்துவிட்டு, படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.