தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'விட மாட்டியாடா நீ..!' - ரசிகரை பார்த்துக் கேட்ட விக்ரம்! - promotion

'கடாரம் கொண்டான்' பட புரமோஷனுக்காக ஆந்திரா சென்ற விக்ரம், தமிழ் ரசிகர் ஒருவரை மேடைக்கு வரவழைத்து தமிழில் பேசி புகைப்படம் எடுத்தச் சம்பவம் தெலுங்கு ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

actor vikram

By

Published : Jul 20, 2019, 6:00 PM IST

'தூங்காவனம்' படத்திற்கு பிறகு ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கடாரம் கொண்டான்'. இப்படத்தில் சீயான் விக்ரம், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படம், நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 'கடாரம் கொண்டான்' படத்தின் புரமோஷனுக்காக நடிகர் விக்ரம் ஆந்திரா மாநிலம் சென்றிருந்தார். அப்போது திரையரங்கில் இருந்த ரசிகர்களிடம் 'தெலுங்கில் பேசுகிறேன்' எனக் கூறியதும், ரசிகர் ஒருவர் 'தமிழிலே பேசுங்கள்' எனக் கூச்சலிட்டார். அப்போது விக்ரம் கோபப்படாமல் சிரித்த முகத்துடன், 'என்ன விடமாட்டியாடா நீ...' என பேசிக் கொண்டே, 'கோயம்புத்தூரில் இருந்து வந்து உனக்காக தமிழில் பேச சொல்ற' என ரசிகரை பார்த்து கேட்டுள்ளார்.

இதன் பின்னர் அந்த ரசிகரை மேடைக்கு வரவழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டு, படக்குழுவினரை அறிமுகம் செய்து வைத்த வீடியோ, சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் தெலுங்கு ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details