தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யானைகளைவிட மனிதர்களைப் பார்த்தால் பயமாக உள்ளது - நடிகர் விஷ்ணு விஷால் - காடன் திரைப்பட ட்ரெயலர்

சென்னை: யானைகளைவிட மனிதர்களைப் பார்த்தால்தான் பயமாக உள்ளது என 'காடன்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

kadan
kadan

By

Published : Mar 3, 2021, 8:05 PM IST

'கும்கி' படத்திற்குப் பிறகு மீண்டும் யானைகளை மையமாக வைத்து பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் 'காடன்'. இப்படத்தில் ராணா, விஷ்ணு விஷால், ஜோயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மிகுந்த பொருள்செலவில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை ஈராஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாரித்துள்ளது.

இந்தத் திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'காடன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில், இயக்குநர் பிரபு சாலமன், விஷ்ணு விஷால், ராணா ஜோயா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் பிரபு சாலமன்

இந்த விழாவில் பிரபு சாலமன் பேசுகையில், "பல ஆண்டு கால உழைப்பு இந்தப் படம். திரையரங்குகளில் மட்டும்தான் இப்படம் வெளியாக வேண்டும். ரசூல் பூக்குட்டியின் உழைப்பு இரண்டு மணிநேரம் காட்டுக்குள் இருக்கும் அனுபவத்தைத் தரும். இன்று (மார்ச் 3) வனவிலங்கு நாளன்று இதன் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளோம்.

அஸ்ஸாமில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுத்துள்ளோம். வனப்பகுதியை கார்ப்பரேட் நிறுவனம் ஆக்கிரமித்து யானைகளின் வழித்தடத்தை மறித்து சுவர் எழுப்பியதை திரைக்கதையாகச் செய்துள்ளோம். ராணாவுக்கு நன்றி.

நான்காண்டு போராட்டம் இப்படம். யானை பாகனாக விஷ்ணுபயிற்சி எடுத்துக்கொண்டு சிறப்பாக நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர் அசோக்குமார், எடிட்டர் புவன், தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. இது ஒரு உலகத்தரமிக்க திரைப்படம்" என்றார்.

நடிகர் விஷ்ணு விஷால்

இதனைத்தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், "யானை என்றால் எனக்கு சிறுவயது முதலே பயம். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் என வாழ்வில் நடந்த நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது யானைகளைவிட மனிதர்களைப் பார்த்துதான் பயப்பட வேண்டியுள்ளது. மனிதன் நிறையை விஷயங்களை மறந்துவிடுகிறான், ஆனால் யானை மறப்பதில்லை" என்றார்.

பின் நடிகர் ராணா பேசுகையில், "காடு இல்லாமல் எதுவும் இல்லை. இத்தகைய வாய்ப்பு எனக்கு வழங்கிய பிரபுசாலமனுக்கு நன்றி. இப்படத்தை ஓடிடியில் வெளியிடாமல் திரையரங்குகளில் வெளியிட முன்வந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி" எனக்கூறினார்.

நடிகர் ராணா டகுபதி

ABOUT THE AUTHOR

...view details