அறிமுக இயக்குநர் அருள் தயாரித்து, இயக்கிய, நடித்துள்ள திரைப்படம் காதம்பரி. காசிமா ரஃபி, அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் என முழுக்க, முழுக்க புதுமுகங்கள் இதில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. முழுக்க முழுக்க திகில் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா அருகில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், "தமிழ் சினிமாவில் வந்த பேய் படங்களைப் போன்று அல்லாது இதுஒரு வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்குக் கொடுக்கும். குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு, குறைந்த பட்ஜெட்டில் இந்த படத்தை முடித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
மேலும் காதம்பரி என்ற பெயர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'நானும் ரவுடி தான்' படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.