’கோமாளி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பூமி’. இத்திரைப்படத்தை ’ரோமியோ ஜூலியட்’, ’போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இயக்கியுள்ளார்.
விவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தெலுங்கு பட நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளர். ஜெயம் ரவியின் 25ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தை, அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ’ஹோம் மூவி மேக்கர்ஸ்’ தயாரித்துள்ளது.