தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மோதிக்கொள்ளும் விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படமும், 'டான்' திரைப்படமும் ஒரேநாளில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

kaathu vaakula rendu kadhal
kaathu vaakula rendu kadhal

By

Published : Dec 8, 2021, 7:55 AM IST

'நானும் ரெளடி தான்' திரைப்படத்தைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்கியுள்ளார். இதில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது டிசம்பர் மாதத்துக்குப் பதிலாக வரும் பிப்ரவரி மாதம் வெளியாகயிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி சிவகார்த்திகேயனின் 'டான்' படம் வெளியாகும் அதேநாளில்தான் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படமும் வெளியாகயிருப்பதாகக் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ரெமோ - றெக்க

முன்னதாக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்று சிவகார்த்திகேயனின் 'ரெமோ' படமும், விஜய் சேதுபதியின் 'றெக்க' படமும் ஒரேநாளில் வெளியாகின.

இதையும் படிங்க:சர்க்கரையைவிட இனிப்பானவள் நம்ம 'கண்மணி': வெளியான நயன் போஸ்டர்!

ABOUT THE AUTHOR

...view details