'அயன்', 'மாற்றான்' படங்களை தொடர்ந்து சூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகி உள்ள படம் 'காப்பான்'. இப்படத்தில் மோகன் லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
மோகன் லாலின் 'காப்பான்' தணிக்கை சான்றிதழ் அப்டேட் - ஆர்யா
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘காப்பான்’ படத்திற்கு தணிக்கை குழு தற்போது சான்றிதழ் வழங்கியுள்ளது.
Kappaan
இந்திய பிரதமாக நடிக்கும் மோகன்லாலுக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அலுவலராக சூர்யா நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், படக்குழு இப்படத்தை தணிக்கை குழுவினருக்கு அனுப்பி வைத்தது.
அதன்படி படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், திரைப்படத்திற்கு 'யூ/ஏ' (U/A) சான்றிதழ் வழங்கினர். இதையடுத்து, இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Last Updated : Aug 24, 2019, 12:36 AM IST