தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

குழந்தையில்லமால் ஒரு வாழ்க்கை முழுமையடையாது - காஜல் பசுபதி - லாரன்ஸ் நியூஸ்

குழந்தையை தத்தெடுக்க உதவிசெய்யுங்கள் என்று நடிகை காஜல் பசுபதி லாரான்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

kajal

By

Published : Nov 4, 2019, 8:49 PM IST

தமிழில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், கோ, கலகலப்பு 2, மௌன குரு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காஜல் பசுபதி. இவர் பிக்பாஸ் சீசன் 1இல் கலந்துகொண்ட பிறகு தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமானார். நடன இயக்குநர் சாண்டியும் இவரும் முதலில் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால் மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர். தற்போது காஜல் தனியாக வசித்துவருகிறார். தற்போது குழந்தையை தத்தெடுக்க உதவி செய்யுமாறு காஜல் பசுபதி லாரான்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித் மரணமடைந்த போது உருக்கமான கருத்து ஒன்றை லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், அனாதையாக வளரும் குழந்தைய தத்தெடுத்து சுர்ஜித் என்று பெயரிட்டு வளர்க்குமாறு அவரது பெற்றோருக்கு கோரிக்கை விடுத்தார். அப்படி குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் அதற்கு தான் உதவுதாகவும் தெரிவித்தார். அந்தக் குழந்தையின் முழு படிப்பு செலவையும் தான் ஏற்றக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

காஜல் பசுபதி ட்வீட்

லாரன்ஸின் இந்தப் பதிவு தொடர்பாக காஜல் தற்போது பதிவிட்டுள்ளார். அதில், உங்கள் தொடர்பு எண்ணை தவற விட்டுவிட்டேன் லாரன்ஸ் மாஸ்டர். நான் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்புகிறேன். குழந்தையில்லாமல் வாழ்க்கை முழுமையடையாது. குழந்தையைத் தத்தெடுப்பது இந்த காலத்தில் எளிதான காரியம் இல்லை. ஒரு குழந்தையைத் தத்தெடுக்க உங்களது உதவி தேவை. அந்தக் குழந்தையின் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியும். இந்த உதவியை நீங்கள் செய்தால் நன்றாக இருக்கும். நன்றி மாஸ்டர் என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிங்க: லாரன்ஸிடம் சமாதானம் பேசும் இந்திப் பட தயாரிப்பாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details