அறிமுக இயக்குநர் பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ' க/பெ.ரணசிங்கம்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து இயக்குநர் விருமாண்டி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். நான் இயக்குநர் திரு. செல்வாவிடம் துணை,இணை இயக்குநராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். நான் இயக்கிய க/பெ.ரணசிங்கம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகமெங்கும் உள்ள மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.