மனரீதியாக ஒருவன் பாதிக்கப்படும்பொழுது அவனுக்குள் ஏற்படுகின்ற மாற்றம் பார்ப்பவரை வியக்க வைக்கும். அந்த மாதிரியான சம்பவங்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பதில்லை. அவ்வாறு நடந்துவிட்டால் சுவாரஸ்யமான பதில்களை தேடி அலையும் மனிதர்களாகவும் சிலரது பார்வையில் பைத்தியம் பிடித்தவனாக காட்சியளிப்போம். இதுபோன்ற சம்பவங்கள் போலவே கே.13 படத்தின் கதைக்கரு இருக்கலாம் யூகிக்கப்படுகிறது.
அருள்நிதியை பழிவாங்க துடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் - கே.13 டீசர் - அருள்நிதி
இயக்குநர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள கே.13 படத்தின் டீசர் பார்ப்பவரை உச்சுக்கொட்ட வைக்கிறது. இந்த டீசரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் உயிரோட்டமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. சாம் சிஎஸ் பின்னனி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது. இப்படத்தின் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கேட்கும் கேள்விகள் ஆழமாக சிந்திக்க கூடியதாகவும் உள்ளன. காட்சிப்படுத்தியுள்ள விதம் பதற்றத்தையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது.
மேலும், மாறுபட்ட இருவேடங்களில் வரும் அருள் நிதி நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். திரில்லர் படமாக உருவாகியுள்ள கே.13 படத்தின் டீசர் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.