'கத்துக்குட்டி' பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், 'உடன்பிறப்பே'. சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்துள்ள இப்படம் உறவுகளை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
இந்நிலையில் 'உடன்பிறப்பே' படத்தின் ட்ரெய்லர் இன்று (அக்.04) வெளியாகியுள்ளது. அண்ணனாக சசிகுமார் நடிக்க, தங்கை கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார். உறவுகளையும், விவசாயத்தைத் தழுவி இந்த படம் முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயின்மெண்டாக உருவாகியுள்ளது ட்ரெய்லர் மூலம் தெரிகிறது.
ஜோதிகாவின் 50 ஆவது படமாக உருவாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிங்க:'அரண்மனை 3' எப்படி இருக்கும்? நடிகர் விச்சு விஸ்வநாத் பேட்டி