கடந்த ஆண்டு 'ராட்சசி', 'ஜாக்பாட்' என இரு படங்கள் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியாகின.
இதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் 'பொன்மகள் வந்தாள்' என்னும் கோர்ட் ட்ராமா ஜானர் திரைப்படத்தில் ஜோதிகா நடித்தார். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மன்ட் தயாரிப்பில் உருவான திரைப்படம், அடுத்த வாரம் மே 29ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.
'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட்டை நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அதன்படி நாளை (மே 21) திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என சூர்யா தெரிவித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் கே. பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க... அமேசான் பிரைமில் வெளியாகும் ஏழு இந்திய படங்கள்