நடிகை ஜோதிகா 'காற்றின் மொழி' படத்திற்கு பிறகு புதுமுக இயக்குநரான கெளதம்ராஜ் இயக்கும் 'ராட்சசி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
'ராட்சசி'யான மாயா டீச்சர்...! - ராட்சசி
ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படமான 'ராட்சசி' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
File pic
இதில் ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ட்ரெய்லரை இன்று (மே 31) மாலை வெளியிட இருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.