தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் கலக்கிய நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டபின் சினிமாவிலிருந்து விலகியிருந்தார். இவர் தமிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸை 36 வயதினிலே படத்தின் மூலமாகத் தொடங்கினார்.
அதன்பின் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்துவரும் ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜாக்பாட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக மைத்துனர் கார்த்தியுடன் இணைந்து ஜீத்து ஜோசப் இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் 'பொன்மகள் வந்தாள்' என்ற படத்திலும் நடித்துவருகிறார். இது தவிர சிறுத்தை சிவா - ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்திலும் ஜோதிகா நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.