சசிகுமார், ஜோதிகா சமுத்திரகனி நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இரா. சரவணன் இயக்கும் இந்த படத்தில் சூரி, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கிராமிய பின்னணியில் உறவுகளின் வலிமையை உரக்கச் சொல்லும் விதமாக இப்படம் உருவாகிறது.
ஜோதிகாவின் அடுத்த படத்தை தயாரிக்கும் சூர்யா! - சூர்யா புதிய படம்
நடிகை ஜோதிகா நடிக்கும் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.
இப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுக்கோட்டை-தஞ்சை மாவட்டப் பகுதிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டடது. இந்த பூஜையில் சூர்யா, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதற்கு முன் ஜோதிகா நடிப்பில் வெளியான 'ஜாக்பாட்' படத்தை சூர்யா தயாரித்திருந்தார்.