தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம்வந்தவர் ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த பிறகு சில காலம் நடிக்காமல் இருந்தார். தற்போது தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அவர் விஜய்க்கு ஜோடியாக குஷி, திருமலை போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். 2017ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் உருவான ‘மெர்சல்’ படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த கதாபாத்திரத்தை அவர் மறுத்துவிட்டார். பிறகு அதில் நித்யா மேனன் நடித்தார்.