அண்ணன்- தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம், 'உடன்பிறப்பே'. அண்ணனாக சசிகுமார் நடிக்க, ஜோதிகா தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் சமுத்திரக்கனி, நிவேதிகா சதீஷ், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்துள்ளார்.
'உடன்பிறப்பே' திரைப்படம் நாளை (அக்.14) அமேசான் ஃபிரைமில் வெளியாகிறது. இது ஜோதிகாவின் 50 ஆவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீது மிகுந்த ஆர்வம் நிலவி வருகிறது.
இந்நிலையில் 'உடன்பிறப்பே' படத்தின் ரிலீஸையொட்டி, படக்குழுவினர் வித்தியாசமான முறையில் புரொமோஷன் செய்துள்ளனர். ஆம்... உடன்பிறப்பே படத்திற்காக சென்னை மெரினாவில் மணற்சிற்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
முன்னதாக இப்படத்திலிருந்து வெளியான 'அண்ணே யாரண்ணே மண்ணுல' பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் பாடலை வைத்து பார்த்தால், அடுத்த கிழக்கு சீமையிலே படம் போல் இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.