தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தனிமையை உணர்ந்தால் உதவியை நாடுங்கள் - ஜஸ்டின் பீபர் - ஜஸ்டின் பீபர் ஆவணப்படம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: பாப் நட்சத்திரம் ஜஸ்டின் பீபர் தனது வாழ்க்கையில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜஸ்டின் பீபர்
ஜஸ்டின் பீபர்

By

Published : Oct 31, 2020, 5:03 PM IST

பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் தனது வாழ்க்கை குறித்து 'Justin Bieber: Next Chapter' என்ற ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனை யூ-ட்யூப் ஒரிஜினல்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் ஜஸ்டின் பீபர் தனது கடந்த கால வாழ்வியல் முறை பற்றியும் மனப் போராட்டங்கள் குறித்தும் இதில் கூறியுள்ளார்.

அதில், "நான் உண்மையிலேயே தற்கொலை செய்துகொள்ள பலமுறை முயற்சிசெய்துள்ளேன். இந்த வாழ்க்கை என்னைப் புயலில் சிக்கியவரைப் போன்று சுருட்டி எடுத்துள்ளது. வலியும் மனிதனைப் போன்று நம்மை விட்டு எப்போதும் நீங்காது. அது சீரான இடைவெளியில் வந்து நம்மைத் தாக்கும்.

நான் அப்போது கஷ்டப்பட்டேன். இப்போது நல்ல மனிதனைப் போல் இருக்கிறேன். ஒருவேளை அந்த நேரத்தில் நான் தற்கொலை செய்துகொண்டிருந்தால் இப்போது இதனை உணர்ந்து இருக்க மாட்டேன்.

நீங்கள் தனிமையை உணர்கிறீர்கள் என்றால் அது பற்றி மற்றவரிடம் பேசுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த மாணவரிடம் உதவியை நாடுங்கள். அது போன்ற மக்களுக்கு நான் உதவுகிறேன். அவ்வாறு செய்யும்போது ஒரு சுதந்திரம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது பீபர் இந்த ஆவணப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், "கடந்த 8 மாதங்கள் வளர்ச்சிக்கான ஒரு காலமாக இருந்தன. மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details